சொக்குப் பொடி
சுமை கண்ட நினைவினில்
சுகம் தந்தாள்
இனிமை எனும் சுவை
வாழ்வில் தோன்ற வந்தாள்
காதல் எண்ணம் சிறகடித்து
அவள் இதயம் தொட்டு வர
என்னிடத்தில் என் இதயம்
ஆனந்த ராகம் பாடுகிறதே
கன்னி ராசியின் ராசி
காளை என்னை திக்கு முக்காட செய்கிறது
காதலின் தூது சொல்லும் கண்களே
தானறியும் காதலின் மயக்கமதை
நானறியேன் என் மனது
நழுவியதும் தொலைந்ததும்
சொக்குப் பொடி போட்டாளோ
சுற்றி வர அவளை
சோதனையில் வெற்றி கண்டாள்
அவள் பார்த்த பார்வை ஒன்றில்
சங்கமத்தை உணர்ந்தேன்
அவள் நினைவே போதும் என்றேன்
சொல்லமுடியவில்லை இந்த
காதல் எனும் சூட்சுமத்தை
வர்ணிக்க முடியவில்லை வார்த்தைகளில்
வைரமான என் மனதில் தங்கமான அவள் நினைவு