காதல்

என்னை உனக்கு பிடிக்கும் என்றால் என்னை விட்டு ஏன் சென்றாய்....
கண்ணை மின்னல் பறிப்பது போலே என்னை பறித்து நீ சென்றாய்....
கனவில் நீ வருவதனால் தினமும் கண்மூடி கிடக்கின்றேன்....
ஒருநொடியேனும் என் கண்முன் வந்தால் என்னை உனக்கு தருகின்றேன்....
முதலே என் முகம் காண வருவாயோ.... இல்லை
இறுதியாய் என் முகம் மூடிப் போவாயோ....
உனக்காக காத்திருப்பேன்....அன்பே
என் உயிர் போகும் வரை பார்த்திருப்பேன்....
என் உயிர் நீங்கி போனாலும்
உன் மூச்சுக்காற்றில் சேர்ந்திருப்பேன்....

எழுதியவர் : ஹுசைன் (24-Jan-16, 2:48 pm)
Tanglish : kaadhal
பார்வை : 203

மேலே