கசலில் விழுந்தேன் மறுபடியும்

கஜல் முதல் கஜல்

இரவும் வரும் பகலும் வரும் ...நிலவோடு நீ மட்டுமே.. 
இணைந்தே இருந்தும் ...பிரிவோடு நான் மட்டுமே.. 

உன் கறுப்பு வெள்ளை சிறையில் எனை சிறை பிடித்தாய் விழிகளாலே.. 
அங்குமிங்கும் என் விழிகளைத் தேடி மிதித்திட முடியும் உன்னால் மட்டுமே 

உன் நினைவாய் வைத்தேன்...'ஆப்பிள் தோட்டத்து ராணி' பெயர் சூட்டியே.. 
என் கனவாய் வந்து கொய்தே மிரட்டுகிறாய் விழிகளை உருட்டியுமே . 

உன் பெயர் போதையில் மது என நினைத்து அருந்தினேன் என்காதல் 
அளவிற்கு அதிகமான அமிர்தம் .என்பதை மறந்து நான் வருந்தியுமே 

எனக்கு நீ ஒளி காட்டும் அகல் விளக்காக ஆனாய் 
உனக்கு நான் விட்டில் பூச்சியாய் ஆனது மட்டுமே 

பேடை உனக்கு விடிந்தும் காத்திருக்கத் தெரியாதோ 
ஆனால் ..கோழிக்கு விடிந்ததும் கூவிடத் தெரியுமே 

குடியாட்சி பெற்ற சித்தனிடம் சொடுக்கின்றாய் உன் விரல்களாலே
கொடிய ஆட்சி நடத்தி துரத்தியே எனை விரட்டுகிறாய் உன் பார்வையிலுமே

உனைக் கண்டதிலே அலையோடு கீழும் மேலும் தாவுகிறேன் உன்னோடு
நுரையாக நீயும் பிடிபடாமல் நானும் உனைத் தேடியுமே

என் காதலை ஜனித்திடச் சொல்கிறேன் தொடர்ந்து உன்னோடு வாழ்ந்திடவே
புதைக்குள் வீழ்ந்திட சொல்கிறாய் மரண த்திலுமே

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (24-Jan-16, 3:37 pm)
பார்வை : 106

மேலே