எம் புள்ள
🌳🌴எம் புள்ள 🌿🌾
வலிக்காம புள்ள பெத்த பூரிப்பு
குடும்பம் காக்க ஒரு - குலவெலக்கு
பட்டினி நான் கெடந்தாலும் உன்ன
பசிக்க நான் விட்டதில்ல - இருக்க
இடமில்லாம தவிச்ச நேரத்துல
காத்துமழை கண்டு கலங்கிய - வேலையில
கோணிபையேட உன்ன கோத்து அனைச்சிகிட்டேன்
என் கூதை போக்கிக்கிட்டேன்...
*
நீ குரல் எடுத்து கூப்பிட்டா - என்
குலை நடுங்குதே
ஓடி வந்து நான் - தவிக்க
ஒன்றுமில்லை என நீ மொரைக்க
சிரிச்சி தொலைச்சி புன்டேன் - என்
தவிப்ப சொல்லி புட்டேன்
ரெண்டு ஒன்னாச்சி என் - உசுரு
நீ ஆச்சி
குடும்ப உசுரு மூனாச்சி
*
எம்புருசன் படுத்து புட்டான் - சீக்கு
வாந்தி எடுத்துபுட்டான்
கஞ்சிக்கே வழி இல்லை - காசுக்கு
எங்கே போவேன்
கடன் வாங்குன காசுக்கு - மானம்வாங்க
வந்தாளே முனியாண்டி பொன்டாட்டி
கழுத்து காது காலி - செஞ்சி
கொடுத்து புட்டேன்
உசுரு ஒன்ன தவிர - ஒன்னும்
இல்ல ஒடம்புல..
*
திக்கு தெரியாம தவிச்ச - நேரத்துல
கண்ணீர் வழிய நான் கெடக்க
கால் தட்டி நீ நடக்க
உசுருக்கு உசுர் கொடுக்க - என்
உசுர் பிச்சி கொடுக்க - இப்போ
ஒன்னு ரெண்டாச்சி
மூனு உசுரு ரெண்டாச்சி
*
உன்ன வித்து உயிர் வளத்தேன்
என் உயிர் கொடுத்து உயிர்வளத்தேன்
தொன்டை தண்ணி யெரங்களயே - உன்ன
தேடும் கண்ணு அடங்களயே
என் தேகம் தொட்டஉன்ன - விட்டு
தோத என்னால தூங்கமுடியலயே
*
போதுமய்ய போதும் எம்புள்ள பரிகொடுத்தேன்
இனி சீக்கு வந்து படுக்காத
என் தலையில கல்ல போடாத
சோரு நான் திங்கயில்ல - என்
சோகம் சொல்ல ஆலுமில்ல
என் செவத்த குட்டி நீயும் - இல்லை.
எந்த எடுபட்ட பய - தேகம்
வளக்க உன்ன தின்னு தொலைச்சானோ
நீங்கள் ஆடு வளக்காதிங்க
என்ன போல் அவஸ்த்த படாதிங்க.....
=தமிழ்நேயன் ஏழுமலை..