கனவுடன் ஒரு கண்ணோட்டம் - பாகம் 3

கனவுகள்சில கண்டவுடன் உடனே மறையும்
கனவுகள்சில கண்டப்பின் நன்கு நிற்கும்
கனவுகள்சில கண்டதில் மனம தினிக்கும்
கனவுகள்சில கண்டப்பொழுதில் மனம் கனக்கும்

கனவுக்கு சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம்
கனவின் பொருளுக்கு இங்கில்லை சூத்திரம்
மனங்கள் கனவுகள்மூலம் கொல்லும் அவதாரம்
மனதில் நிருக்காது பலகனவுகளின் சித்திரம்

கனவுகள் பற்றிஉலகம் பலசொல்லும் பலன்கள்
பலன்கள் ஒன்றுடனொன்று கொள்ளும் முரண்கள்
முரண்கள் முந்தும் பலன்களுள் சிறைகள்
சிறைகள் வேண்டாம் காண்போம் கனவுகள்

அரசன் கனவும் ஆண்டியின் கனவும்
முரடன் கனவும் வெகுளி கனவும்
சுகவாசி கனவும் சன்னியாசி கனவும்
பலன்கள் ஒன்றாக உரைப்பது தவறு

ஆசைகள் பலகொள்ளும் மனதின் கனவுகளும்
ஆசைகள் கைக்கொள்ளா மனதின் கனவுகளும்
கவலைகள் சவலைகள் அவலைகள் மனக்கனவுகள்
பலன்கள் ஒன்றொன்று நிறுத்த வதரிது

கனவுகள் மனத்தின் அற்புத வெளிப்பாடாம்
மனங்கள் ஒன்றுக் கொன்று வேறுப்பாடாம்
கனவுக்கு பொது அகராதி மாறுப்பாடாம்
மனத்திற்கு கனவகா ரதிதனி வேண்டும்

கனவகாரதி காண மனதை யறியவும்
கனவகாரதி காண மனதை யுணரவும்
உணர்வும் இயல்பும் அறிவும் அறியவும்
நமது கனவகாரதி தனி அமைப்போம்

- செல்வா


(வளரும்..)

எழுதியவர் : செல்வா (25-Jan-16, 7:37 am)
பார்வை : 314

மேலே