காதல் வலி
அவள்
காகிதமாய்ப் பறந்து வந்தாள்
நானோ எழுத்தாணியாய் எழுந்து நின்றேன்
இருவரும் சந்தித்தவேளையில்
காதல் கவிதையாய்ப் பிறந்தது
ஜாதி வசதி
இரண்டு தீயும் புயலாய் வீசியது
அதில்
காகிதம் பறந்துபோனது
காதலியோ மறந்துபோனாள்
கவிதைகள் துறந்து போனது
எழுத்தாணி மட்டும் இறந்துபோனது
காதலியே இதுதான் காதலா ...

