தமிழ் எனக்கு
தாலாட்டில் துணை நின்று ;
மொழியென்னும் பால் தந்து ;
பிழையில்லா மதி தந்து ;
இசையாகி மடி தந்து ;
உயிரின்றி வாழ்ந்து வந்த என் நாவிற்கு உயிர் தந்த, தமிழ் என்தன் முதல்அன்னை ;
அழகான கவி வரியாள் ;
என் விரல் செதுக்கும் சிலை வடிவாள் ;
துளி கூட கரைபடியாள் ;
புவியெங்கும் இணை அறியாள் ;
அவள் இதழோடு முத்தமிட்டால் தேன்
கூட தோற்று போகும்
தமிழ் என்தன்
முதல் காதலி .
உயிர் கொண்டும் மெய் கொண்டும்
உயிர்மெய் என்று உருவாகி ;
என் விரலோடும் விழியோடும் இதழோடும் விளையாடி ;
என் நாவினின்று நான் ஈன்ற தமிழ் என்தன்
முதல் பிள்ளை ;