கல்லூரி வாழ்க்கை
அன்று
ஆசிரியர் வருகை
எமக்கு அருவெறுப்பாகும்.....
இன்று
எங்கள் வாழ்க்கை
பெற்றோருக்கு அருவெறுப்பாகும்.....
பேசி பேசியே பொழுதும்
போனது இந்நாள் வரை
எதைப் பேசினோம் என அறியாமலேயே.......
அன்று
கல்லூரி வாயிலில் நின்றே
கரைந்து போன காலங்களால்........
படபடப்பான பயணம்
அனுதினப் பயணமாய்
தொடர்கிறது வேலைத்தேடும்
பயணம் இன்று........
அன்று வகுப்பில் இருக்க
இருக்கை இருந்தும்தானே
வெளியில் நிற்பதை வழக்கமாக்கினோம்.......
இன்று நிலைத்து நிற்கவே
தேடி அலைகிறோம் பணி
இருக்கையை தேடியே வேலை
இல்லா பட்டதாரி எனும் பட்டத்தோடே........
***************தஞ்சை குணா*****************