இடை விடா படலம்-நாகூர் லெத்தீப்

தாண்டவம்
ஆடுவது யாராலே
இங்கே மண்ணில்
வீழ்வது
யாராலே.........!

உயிர்
கொடுப்பது யாராலே
இங்கே உயிர்
பறிப்பது
யாராலே.........!

மரணத்தின்
பிடியினிலே
ஓர் இனம்- நடை
பிணம்
எதனாலே.......!

தடுக்கப்படாத
பாவங்கள்
மறுக்கப்படாத
கொடுமைகள்
எதனாலே.........!

அரசியல்
அவலத்தில்
மானிட சடலம்
இடை விடா
படலம்.........!

வெற்றி
தோல்விகள்
யாருக்கு -எதற்கு
எல்லாம்
இழந்த பிறகு........!

போராட்டம்
தேரோட்டம்
எல்லாம் முடிந்தது
இருளானது
விடியலை
தேடி
செல்லும்
மனித கூட்டங்கள்
இதோ வீதியிலே.........!!

எழுதியவர் : latif (28-Jan-16, 3:42 pm)
பார்வை : 65

மேலே