மனித நேயம்-நாகூர் லெத்தீப்
![](https://eluthu.com/images/loading.gif)
சிறகுகள்
இன்றி சிறகடிக்கும்
வானம்
தவழுவது
பறைவையா
மனிதனா........!
ஓர்
இரவுக்குள்
பூத்த மலர்
உறக்கமின்றி
இறந்து போனது
யாருடைய தவறு...........!
ஊன்றி
நடக்கம்
கால்கள் வலிமையை
இழக்கிறது வறுமையில்
தவழ்கிறது
சிறு குழந்தை
இங்கே யார்.........!
பார்வைகளை
இழந்த
கண்களோ இங்கே
உண்மை பேசுகிறது
பார்க்கும் கண்கள்
பொய்மையே சுவாசிக்கிறது
பார்ப்பது
எது உண்மை........!
வீழ்ந்தது
அவர்களுடைய
தவறா
மனிதா உனது
இனம் தானே
எதனால் உனக்கு தயக்கம்
உதவி செய்திட........!
இறந்த
உலகத்தில்
வாழும் மனிதனுக்கு
உயிர் இருந்தும்
இல்லாமல்
போனது........!!!!
மனித நேயம்..........!