மிருகமும் மனிதமும் - முழுமையாக படியுங்கள்

தமிழகத்து தமிழன் நான்
ஈழம் நான் பருகும் தமிழ் அமுதின் மறுவடிவம்
நாகரிகம் கொண்ட மூத்தகுடியின் மீச்ச சிதறல்கள்
இன்றோ கதறல்கள் போசிங்கி போன பூப்பந்தின் குமுறல்கள் !

பல ஆண்டு இனப்போராட்டம் என்ற பெயரில்
அரசியலுக்கும் சமூகத்திற்க்கும் இடையே
ஒரு பேய் நாடகம்
பலியானதோ பூ நூலகம் !

'வாக்களிக்கும்' உரிமை தருவதாக 'வாக்கு பெற' !
வாக்கு பெற்றாலோ 'வாக்கு சொல்லும் புது சாக்கு' இது அரசியல் கோட்பாடு !

இதை அறியாமல் சிறும்பான்மை கூட்டம் மாண்டு போக
இடையே இரு நாடுகளின் அரசியல் தந்திரம் மிருக வேட்டைக்கு வந்தது !

நிர்வாண மேனியை காப்பாற்ற தமிழன் வருவான்
என்றெண்ணால் இந்தியன் வந்தான்
கிழிந்த நாட்டு கோடியை போற்றி
மானம் காப்பதாக விளம்பரம் செய்ய !

சிங்கள நாட்டு பாதுகாவலன்
நிர்வாணம் காணதுடிக்கும்
அழுக்கு நெஞ்சம் கொண்ட
அரக்கன் இன செயல் புரிவான் !

நம்பிக்கையால் உயிரிழந்து சினமுடைந்து
மீண்டு எழுவான் ஈழத்தமிழன்
அதில் ஒரு எட்டப்பன் துரோகம் புரிவான் !

போராட்டத்தோடு போராடும் போர்கூட்டம்
அநியாயமாய் சாகும் தெருக்கூட்டம் !

பூக்கள் சிந்திய உதிரம் நெஞ்சை உருக்கும்
பாவப்பட்ட பூமி நெருப்பில் கிடக்கும் !

இருப்பதை வைத்து
நல்வாழ்க்கை வாழ தெரியாத நரிக்கூட்டம்
ஒருநாள் நாரி
நடுத்தெருவில் பிணமாக
இந்த போராட்டம் !

எங்கோ ஒரு சிலரிடம்
ஓங்கும் மனிதம் உயிர் தியாகமானால் !

அதையும் புசித்து உண் வளர்க்க
கழிவு இத்தம் துடிக்கும் !

இதற்கு விடைதான் என்னவென்றே அறியாமல் காடு சுடுகாடாகிறது ..

ம்ம்ம் இறுதியில் சுடுகாட்டில் நிரந்திர நித்திரை கொள்ளதானோ இந்த போராட்டம் ..!!

மிருகம் மனிதனாகலாம் மனிதன் மிருகமானால் சுடுகாடே எஞ்சும் வளர்க்க மனிதம் ..!!

எழுதியவர் : கவி தமிழ் Nishanth (28-Jan-16, 8:22 pm)
பார்வை : 95

மேலே