புதியதோர் உலகு செய்வோம்
கூழுக்கும் வழியில்லா ஏழை பாழை
கொடுமைக்கே ஆளாகி எலும்புக் கூடாய்
பாழுக்கு வாழ்கின்றார் ‘ஏழை’ ‘பாழை’
பட்டத்தை சுமக்கின்றார் ! பட்டே வாழ்வில்
கீழுக்கு போய்நித்தம் குப்பைத் தொட்டி
கிளர்கின்றார் ! நாய்களுக்கு போட்டியாகி
பீழைக்குள் தவிக்கின்றார் ! ஊரைச் சொல்லி
பிழைக்கின்றார் வருமைஎனும் ஆழிக்குள்ளே !
யாருக்குத் தோன்றியது மண்ணும் பொன்னும் ?
யாவர்க்கும் பொதுமையிலா நிலையில் இங்கு
நீருக்கும் உருமையினைக் கோருகின்ற
நீசர்களும் நிறைந்திட்ட தேயம் தன்னில்
பேருக்கு வாழ்கின்றார் ! மனிதன் என்ற
போர்வையினைப் பேராகப் போர்த்தி வாழ்வோர் !
தேருக்கும் சாமிக்கும் படைப்ப அன்றி
தேம்புகின்ற ஏழைக்கு அள்ளித் தெளிக்கமாட்டார் !
மாட்டிற்கும் ஆட்டிற்கும் வீட்டைக் கட்டி
மகிழ்வோடு கொடுக்கின்ற ஈன சாதி
கேட்டிற்க்குள், வீதியிலே உழன்று வாடும்
கீழானோர் வாழ்விலொளி ஏற்றமாட்டார் !
கந்தைக்கே வழியில்லா காலம் மாறி
கண்ணீரும் செந்நீரும் வடியாராகி
ஊனுருகி எலும்பே மிஞ்சி நிற்கும்
என்னருமை சொந்தங்களின் நிலை என்று மாறுமோ ?