எத்திக்கு மெத்திக்கு மெட்டு ---- முற்று முடுகு வெண்பா

இற்றைக்கு மொத்தத்தை இற்றைக்கு வெற்றிக்கு
நற்கற்று முத்திக்கு நற்சக்தி ---- ஒப்பற்று
வித்திட்ட நற்பற்று வித்திட்டு மிச்சத்தை
எத்திக்கு மெத்திக்கு மெட்டு .


பொருள் :-

முழுமையான வெற்றியினை ஒருவன் இன்று பெறுவதற்கு இன்றே மொத்தமாக நன்மை தரும் கல்வியைக் கற்க வேண்டும் . அப்படிக் கற்றால் அவனுடைய முக்திக்கும் ஒப்புமை இல்லாத நற்சக்திக் கிடைத்து அதைப் பற்றிக் கொண்டு வாழ்பவனுக்கு அவன் இன்று செய்கின்ற நன்மைகளின் மிச்சங்கள் அவனுடையப் புகழினை எல்லாத் திக்குகளிலும் எட்டும்படி பரவிடச் செய்யும் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (28-Jan-16, 9:07 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 70

மேலே