புரட்சிக்காரி

பூமியில் சே குவாரா செய்தது உரிமைப் புரட்சி
பூவிதழில் என் அன்பே நீ புரிவது புன்னகைப் புரட்சி
பூமி சிவந்தது குருதியில் சே யின் உரிமைப் புரட்சியில்
பூவிதழ்கள் சிவந்தது உன் புன்னகைப் புரட்சியில்
எப் புரட்சிக்கு நான் கொடி பிடித்து பின் செல்வேன் நீயே சொல்லு !

அகநானூறு கண்டு உன் கருங் கூந்தல் மிதக்கும் எழில் தோளினில் சாய்ந்திடவோ
புறநானூறு கண்டு புரட்சிப் புயலாய் போர் முகத்தினில் வெற்றி கொண்டு திரும்பிடவா
முறம் கொண்டு புலி ஓட்டிய வீர வழி வந்தவளே வஞ்சிக் கொடியே
கதிரவன் செங் கதிரில் கவினிதழ் விரிக்கும் செந்தாமரை செல்வியே
புரட்சிக் கொடியே அதன் பின் உன் பின் கொடி பிடிக்க நான் வரவா நீயே சொல்லு !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Jan-16, 10:01 am)
Tanglish : puratchikkaari
பார்வை : 104

மேலே