தருணமே
சிலரது பாசத்தை புரிந்துகொள்ள தருணம் வேண்டும்!
தாயின் உள்ளுணர்வை உட்கொணர தருணம் வேண்டும்!
காதலின் ஆழத்தை உணர்ந்துகொள்ள தருணம் வேண்டும்!
சந்தோசத்தையும் துக்கத்தையும் நட்பின்
விளிம்பில் பகிர்ந்துகொள்ள தருணம் வேண்டும்!
உண்மையறிய தருணம் வேண்டும்!
தந்தையின் பாதுகாத்தலை புரியவும்
உணரவும் தருணம் வேண்டும்!
இவையனைத்தும் போல காதலை
பெற்றோரிடத்தில் சொல்லவும் தருணம் வேண்டும்!-திருத்தம்
தருணம் மட்டும் போதாது-
மனதில் துணிவும் வேண்டும்!
மனதில் துணிவும் பிறக்க செல்கிறேன்- என்
தாயிடம் அவள் மனதை தெரிந்துகொள்ள?