காதல்
அடியே, உனையே
நினைத்தேன் மழையே
அடியே, எனைஏன்
கெடுத்தாய் சிலையே
உயிரிலே உணர்விலே
கலந்த ஓர்
பதுமையே
வரிகளில் கவிகளில்
நுழைந்த நீ
புதுமையே
என்னென்ன செய்தாயடி
காதல் மரமேறி
கொய்தாயடி
வண்ணங்கள் தந்தாயடி என்
வாழ்வை விழி
கிண்ணத்தில் கொண்டாயடி
உருகியே போகிறேன்
பறவையாய் ஆகிறேன்
பணிகளை மறக்கிறேன்
தனிமையில் தவிக்கிறேன்
அஞ்சாத நானே
பஞ்சாங்கம் பார்த்தேன்
ஏதேதோ என்னுள்
செஞ்சாளே பூர்த்தேன்