ஓர் இலக்கிய பயணி - - - - - -

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
காலத்தின் கனவுகளை
படைப்புக்களின் நிதர்சனங்களில்
காட்டும் கவனத்தில் இருந்து தான்
பிறக்கிறது அவனது வேகம் !
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
நிர்ணயிக்கப்பட்ட வாழ் வெளியில்
சிறைப்பட்டிருக்கும் விசாலமான
உலக வாழ்க்கையின்
எண்ணற்ற கோலங்களுக்கு
நிறுவுப்புள்ளி இடுவது இவன் கை !
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
சமூகம் பறித்து விடும் இருப்பை
நிர்ப்பந்திக்கப்படும் உலக வாழ்வை
அறிவியல் தத்துவம் இலக்கியம் என
தரிப்பிடத்தில் காத்திருந்து ஏறி
வாழும் சாத்தியங்களுக்காக
இறங்கி உருவாக்கும் படைப்பாளி !
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
நவீனத்துவத்தின் நம்பிக்கைகளை
தொகுப்புக்களாக கட்டிக் கோர்த்து
எழுத்துக்களின் கௌரவங்களோடு
சமர்ப்பணமாக்கும் உத்வேகம் நிரம்பிய
வலிகளற்ற அற்புத இருப்பு !
இவன் சிந்தனைகள் அற்றுப் போகாத
உள் வெளி வீசும் தத்துவ வாடை !
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
பிரபஞ்ச உன்னதத்தின் வாயில்களை திறக்க
தங்கத் திறவுகோல் துளைத்து
தோண்டப்பட்ட மிக மிக எளிமையான
கற்பனை செய்து கொள்ளக்கூட முடியாத
எப்போதும் நிறைந்து நிறையும்
அடங்காத ஒரு ஓரங்கட்டப்பட்ட
இலக்கண வழு !
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
சௌகரியமான மனோபாவம் பொதிந்த
பேராற்றல் கொண்ட உந்து சக்தி வாய்ந்த
பொதுப்புத்தி சார்ந்த சமூக மனவாளன் !
சிந்தனை பார்வை வெளிகளை கடந்த
இலக்கியத்திற்காக வாழ்வைத்
தொலைத்த அவனுக்கு இந்த
உலகே ஒரு குக்கிராமம் !
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
வாழ்வின் அர்த்தப் படுத்தலில்
கனவுகளே அவனுக்கு உச்சம் !
லௌகீகக் கனவுகள் வெறும் அற்பம் !
அவன் நினைவுகளில் சிதறிச் செல்லும்
பக்குவங்கள் வெகு சொற்பம் !
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
பல ஞாபக அடுக்குகளை
செழுமை கொண்ட
பலமான கடந்த காலங்களை
பன்னெடுங்கால மனித சமுத்திரங்களின்
சொகுசு வாழ்வை
அவன் சுயபோக இருப்பை
துச்சமாக்கும் இவன்
மென் வரணம் தடவிய தூரிகை !
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
ஒன்று மட்டும் அவனுடைய நிச்சயம் !
அவனுக்கான பயணம் தொடர்நிலை கொண்டது !
இறப்பு அவனை நெருங்குவதில்லை !
மீண்டும் மீண்டும் கருக் கொண்டு
பிறந்து கொண்டே இருக்கிறான்
பல நூறு வருடங்கள் ......!
அவன் அழியா ஆயுள் காரகன் !
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ்:உதயா (31-Jan-16, 4:23 am)
சேர்த்தது : தமிழ் உதயா
பார்வை : 88

மேலே