அச்சய்யா, எங்கடா செல்லம் போயிட்டே

======================================

அச்சய்யா, எங்கடா செல்லம் போயிட்டே?
=====
பாட்டி எம் பேரு அச்சய்யா இல்ல. அக்‌ஷய்.
=====
ஏண்டப்பா, வாயிலெ நொழையாத இந்திப் பேர உனக்கு உங்கப்பன் வச்சிருக்கான். நம்ம தமிழத் தவிர இந்தியாவிலே இருக்க மற்ற மொழிங்கெல்லாம் கலப்பட மொழிங்கன்னு உங்க தாத்தா சொல்லிருக்காரு. ஏ நம்ம தமிழ்ல அழகான பேருங்களா இல்ல?
==
இல்ல பாட்டி, இப்பெல்லாம் நூத்துக்கு 98% தமிழாசிரியர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள், படித்த தமிழர்கள் எல்லாம் அவுங்க பிள்ளங்களுக்கு இந்திப் பேருங்கள வைக்கறது தான் நாகரிகம்ன்னு நெனைக்கறாங்க. நாம என்ன தனிச்சா நிக்க முடியும்?
===
நாசமாப் போச்சு. சொந்த தாய் மொழிலே பிள்ளைங்களுக்கு பேரு வைக்கறது கேவலம்ன்னு நெனைக்கறது சொந்தத் தாயவே கேவலப்படுத்தறதுக்கு சமம்டா. உங்கப்பனுக்கு இளவரசன் –ன்னு அழகான பேர உங்க தாத்தா வச்சாரு. தமிழ்லெ பேரு வச்சிருக்கற பொண்ணத் தான் உங்கப்பன்க்குக் கட்டி வைப்பேன்னு மன உறுதியா இருந்து உங்க அம்மா விண்ணரசியை கல்யாணம் பண்ணி வச்சாரு. நல்ல தமிழ்ப் பேர வச்சிருக்கற எம் மகனும் மருமகளுஞ் சேந்து உனக்கு அச்சயான்னு வச்ச்சு நம்ம செம்மொழிக்கே இழுக்கத் தேடிக் குடுத்தாங்களே. நீயாவது பெரிய பையன் ஆனதும் ஒரு வக்கீலுகிட்டச் சொல்லி நல்ல தமிழ்ப் பேரா மாத்தி வச்சுக்க.
====
சரிங்க பாட்டி.
=======================================================
अक्षय : Forever; Indestructible; Eternal, immortal, indestructible
முடிவற்ற, நிலைத்து நிற்கிற, அழிக்க முடியாத, என்றும் நிலைத்திருக்கிற
=======================================================
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. பிறமொழிப் பெயர் அறிய.
=======தமிழ்ப் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்டுவது கேவலமான செயல் அல்ல; அவ்வாறு செய்யத் தவறுவது போற்றத் தக்க செயல் அல்ல.

எழுதியவர் : மலர் (1-Feb-16, 9:01 am)
பார்வை : 190

சிறந்த நகைச்சுவைகள்

மேலே