இன்னா செய்தாரை

முகப்புரை
"பொறுமையே கடலினும் பெறிது"
என்னும் பழமொழியின் கருத்தை நாம் அறிவோம். இதுபோன்ற மனித வாழ்வின் தத்துவத்தைப் பல்வேறு அதிகாரங்களாக வரையரை செய்து, நமக்காகத் தந்துள்ளார் பொய்யாமொழிப்புலவர். அவற்றுள் இன்னா செய்யாமை குறித்து, இக்கட்டுரையில் காண்போம்.

இன்னா செய்யாமை
வள்ளுவர் இன்னா செய்யாமை குறித்து ஓர் அதிகாரத்தையே இயற்றியுள்ளார் என்றால், இன்னா செய்யாமை அவர் அளித்துள்ள முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும். இவ்வதிகாரத்தில், இன்னா செய்யாமை, அதன் விளைவு, இன்னா செய்தாரைப் பொறுத்தல், அதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி, வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னா செய்தாரைப் பொறுத்தல்
"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்"

என்ற குறளின் பொருள், நமக்குத் துன்பம் செய்தாரைப் பொறுத்துக்கொண்டு, அவரைத் தண்டிக்காமல், அவரே நாணும் அளவிற்கு நன்மைகளை அவருக்குச் செய்தால், அதன் பிறகு அந்த நபரும் இன்னா செய்யாமலும், நன்னயம் செய்தும் மனித நேயத்தை வளர்த்துக் கொள்வார்.

சான்றாண்மைப் பண்பு
"இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு"

என்னும் குறள், நமக்குத் துன்பம் செய்தார்க்கும் நாம் நன்மையே செய்யும் சான்றாண்மைப் பண்பை விளக்குகிறது. அப்பண்பு இல்லாதவர், சான்றாண்மை என்ற பண்பினால் எப்பயனும் அடையமாட்டார்.

2015 மழை வெள்ளம்
"சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்"

சிறப்பு வாய்ந்த செல்வத்தைப் பிறரைத் துன்புறுத்திப் பெறலாமாயினும், அதனைச் செய்யாது, அச்செல்வந்தருக்கும் நன்மையே செய்ய வேண்டும்.

இதற்கு மிகச் சிறந்த சான்றாய், 2015 இல், மழை சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கண்டோம். அதனைப் பொருட்பத்தாமல், பல நல்லெண்ணம் கொண்ட மாந்தர்கள், தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை மறந்தும், பாதிக்கப்படாதவர்கள், கடவுளுக்கு நன்றி கூறும் வகையிலும், தங்களது இல்லாமையை மறந்து, பிறர்க்கு உதவி, மனித நேயத்தை உறுதிப்படுத்தினர்.

முடிவுரை
அதனால், பிறர்க்கு உதவும் குணம் படைத்தால் தான், ஒருவன் மனிதனாகவே வளம் வர முடியும் என்பது உறுதி. அது இன்னாராய் இருந்தாலும், இன்னா செய்தாராய் இருந்தாலும், அவர் செய்யும் துன்பங்களைப் பொருத்துக்கொண்டு, அவருக்கும் நன்மையே செய்தால், வாழ்விலே சொர்க்கத்தைக் காணலாம்.

எழுதியவர் : ம. அரவிந்த் சகாயன் (1-Feb-16, 7:01 pm)
சேர்த்தது : ம அரவிந்த் சகாயன்
பார்வை : 1659

மேலே