தங்கரதம் வந்தது வீதியிலே - ஆபோகி

முத்துராமன், சந்திரகாந்தா நடித்து 1964 ல் வெளிவந்த ’கலைக்கோயில்’ திரைப்படத்தில், கவிஞர் கண்ணதாசன் இயற்றி, எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே ராமமூர்த்தி இசையமைப்பில் பாலமுரளிகிருஷ்ணா, பி. சுசீலா ’ஆபோகி’ ராகத்தில் பாடிய ’தங்கரதம் வந்தது வீதியிலே’ ஒரு அருமையான பாடல். யு ட்யூபில் கேட்கலாம்.

ஆ....
ஆ......
ஆ..... ஆ..... ஆ.....

தங்கரதம் வந்தது வீதியிலே
ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே

மரகதத் தோரணம் அசைந்தாட
நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட

மரகதத் தோரணம் அசைந்தாட
நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட
(தங்கரதம்)

செவ்விளநீரின் கண் திறந்து
செம்மாதுளையின் மணி வாய் பிளந்து

முளைவிடும் செந்நெல் கோலமிட்டு
மூவருலா வந்த காலங்கள் போலே

தங்கரதம் வந்தது வீதியிலே.. ஆ.... ..... .....

மாங்கனிக் கன்னத்தில் தேனூற
சிறு மைவிழிக் கிண்ணத்தில் மீன் ஆட

தேன் தரும் வாழைகள் போராட
தேவியின் பொன் மேனி தள்ளாட ஆட

தங்கரதம் வந்தது வீதியிலே.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Feb-16, 4:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 416

மேலே