நாங்கள்

மரத்தில் இருந்து பறந்து போனால் பறவை
மரத்தில் இருந்து உதிர்ந்து போனால் இலை

மரத்தில் மறைந்தால் பறவை
மரத்தில் நிமிர்ந்தால் இலை

பறக்க தெரிந்த பறவைக்கு
நிரந்தர இடம் இல்லை
நிமிர தெரிந்த இலைக்கு
பறக்க வழி இல்லை

காற்றின் திசை
இலையின் பச்சை
பறவையின் இன்னிசை
பூமியின் விசை

வாழ்க்கை
சிலருக்கு பறவை
சிலருக்கு இலை

பறவையாய் பறந்தால் இரை ஆவோம்
இலையாய் உதிர்ந்தால் உரம்
ஆவோம்

பரவாயில்லை

மொத்தத்தில்
நாங்கள் பினம்தின்னி கழுகுகள் இல்லை

சரித்திரத்தில்
நாங்கள் உயிர்கொல்லி
கூட்டங்கள் இல்லை

தினமும்

இசை ஏற்படுத்தும் பறவைகளாக
இல்லை நிழல் கொடுக்கும் இலைகளாக

வாழ்வோமே நாங்கள்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (1-Feb-16, 10:13 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : naangal
பார்வை : 89

மேலே