ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு நில்லாமலே ஓடு
நின்று விட்டால் உன் வாழ்வு மண்ணோடு
பாடு பாடு பாடு வெற்றி உண்டே பாடு
தயக்கம் கொண்டால் உனக்கோ பெரும்பாடு
ஆடு ஆடு ஆடு அசையாமல் ஆடு
அசந்தால் நீயும் பலியாடு
தேடு தேடு தேடு உனக்குள்ளே தேடு
பெரு ஒளி அதை நீ தினம்தேடு
தோல்வி வேண்டும் வாழ்வில்
இல்லையென்றால் வெற்றி அது ருசிக்காதே...
அவமானம் சேர்த்து அடகுவை
கடைசி வரை அதை மீட்காதே...
பயம் அதைத் தொலை அது
உன்னை தடுக்கும் வலை
வெற்றியெனும் மலை
அதுபிடிக்க நீயும் கொடு
வியர்வை எனும் விலை
உழைப்பால் நீயும் உச்சம்தொடு
நாளைய வெற்றி உனதோடு
என்றும் நேர்மை நட்போடு
முடியும் என்பதை எப்போழ்தும்
பச்சையாய் குத்திவிடு உளத்தோடு
தோல்வி வேண்டும் வாழ்வில்
இல்லையென்றால் வெற்றி அது ருசிக்காதே...
அவமானம் சேர்த்து அடகுவை
கடைசி வரை அதை மீட்காதே...
பெரு யானை அடக்கும் சிறுகுச்சி
உலகை விரிக்கும் உன் சுயபுத்தி
அமைதி மட்டும் உன் தெம்பு
அதை ஆயுதமாய் கொண்டே
உலகை வெல்லலாம் நீ நம்பு
நீ கோபம் கொள்ள வேண்டாம்
நீ கோபம் கொல்ல வேண்டும்
கொள்கை வைத்து வாழ்ந்து வாடா
கொல்லும் பொய் புதைத்து வாடா
பனியாய் என்றும் படர்ந்து வாடா
ஓடு ஓடு ஓடு நில்லாமலே ஓடு
நின்று விட்டால் உன் வாழ்வு மண்ணோடு
பாடு பாடு பாடு வெற்றிஉண்டே பாடு
தயக்கம் கொண்டால் உனக்கோ பெரும்பாடு
ஆடு ஆடு ஆடு அசையாமல் ஆடு
அசந்தால் நீயும் பலியாடு
தேடு தேடு தேடு உனக்குள்ளே தேடு
பெருஒளி அதை நீ தினம்தேடு.