நங்கூரமாய் நடு நெஞ்சில் அவள்

என் நாணத்துக்கே நாணம் சொல்லியே
நங்கூரமாய் நடு நெஞ்சில் விழுந்தாய்
நான் என்றே நாம் பார்த்தோம்
நாளாக நான் அழிந்தே நாமானோம்
அன்பு என்ற சந்தனத்தால் நாளும்
காதல் மணம் காற்றில் கலக்கவே
கால்கள் கொண்டே காதல் காட்டுக்குள்ளே
காற்று வழியே நெடு நடந்தோம்
வீணையும் நாதமும் நாம் என்றோம்
விதியின் பிடியால் வேறானோம்
நம்மைப் பிரித்து காதல் அழிக்க
நயவஞ்சகர் நம்மை சூழ்ந்தே நெருங்கிவிட்டார்
இம்மை இதிலே இணைய மாட்டோம்
என்றே எண்ணி ஏமாந்து போகவே
எண்ணம் எல்லாம் எரிந்து விடவே
அவர் ஆசை எல்லாம் கலைந்து ஓடவே
சதியைக் வெட்டி சாக்கடையில் அழித்து
சகலமும் கிட்டி பகலவனாய் ஒளிப்போம்.

எழுதியவர் : செல்வா.மு (தமிழ் குமரன்) (2-Feb-16, 12:54 pm)
பார்வை : 629

மேலே