என் கானக் குயிலே
கானத்துக் குயிலின் சுக ராகத்திலே
மவுனத்தில் மொழி பேசும்
இனிய கீதமே
உன்னையன்றி வேரொன்றுமில்லை இந்த கேடுகெட்ட வாழ்க்கையிலே...
உன்னோடு வாழும் வரம் மட்டும் போதுமே
உன்னையே தேடுகின்றேன் முகவரி தேடும் முகம்பார்த்தே
உன் முகம் கண்டதனாலே என்னவோ
கனவாகிப் போகுதே முகவரி தேடியே
காலம் கடந்தும் வாழ்கின்றேன் உன்
கண்களின் பார்வையாலே
சோகத்தில் மூழ்கியும் வாழுறனே காதல்தான் என் விழியெல்லாமே
நீ சென்ற இடமெல்லாம் வாசமே
வாசத்தில் சுவாசம் நான் வந்த தடமெல்லாம் படர்ந்திடுதே
என் உள்ளம் துளித்துளியாய் சிலிர்க்குதே
உன்னில் விழுந்த மழைத்துளிபோலே
சில்லென்ற துளிகளில் உறையாமல் உறைந்திடுதே
என் மனமும் குடைபோலே சிலிர்த்திடுமே
இதயம் திறவாமல் போகுதே
நான் இருக்கையிலே
உன் இதயமும் சொல்லாமல்
எங்கோ தொலைந்திடுதே
இந்த பாழும் மனதில் எப்போதும் குடியிருக்கும் உன் ஞாபகங்களிலே ஞாபமே! குடிகொள்ளாமல் ஏங்குதே உன் நினைவிலுமே
தொடுக்காத மலர்களும் வாழுமோ உலகிலே
தொடுத்த பின் மலர்களும்
மணக்காமல் போய்விடுமோ
நீ தொட்ட இடமெல்லாம் பொன்னாகும் உண்மையிலே
என் வாழ்க்கையே தோட்டமாய் மலரும் உன் புன்னகையிலுமே
உன்னோடு செல்லும் இந்த இதயம் சுற்றுமே சிறகில்லாமலே
சிறகொடிந்து போன பின்னும் எந்தன் மனம் அலையுமே எந்த திசையிலுமே
புரியாமல்போகும் வார்த்தையில் கூட
என்னைப் பிரியவில்லையே
பிரிய நினைத்திடும் போதும்
என்னோடு வாழாமல் போவதேனோ?
என்னோடு சேர்ந்து வாழ்க்கையும் தள்ளாட்டம் படகைப்போலே
தொலைந்து போனதில் என்காதல் படகும் தத்தளிக்குது துடுப்பினாலே
அழகிய மலராய் சிரித்திடுமே தொடரும் உறவினிலே
தொடாத நிலவாய் நினைத்திடுதே
தொடர்வதிலுமே
விண்ணிலும் மாற்றங்கள் உன்சொல்லைப்போலே
இருந்தும் நீமட்டும் மாறாமல் இருந்தால் போதும்
உன்னால் நானும் மாறாமலுமே