முகம் 4
முகம் (4)
========================================ருத்ரா.இ.பரமசிவன்.
கணினிகள் வந்த போதும்.
நீ ஒளிந்து கொள்ள உனக்கு தேவை
உன் கண்ணாடி வளையல்கள்.
அவை என்றும் உடைந்ததே இல்லை.
நொறுங்கியவை
என் இதயங்கள் தான்!
இதயங்களா?
எத்தனை இதயங்கள் எனக்கு?
கணக்கு இல்லை என்னிடம்.
அந்த கணக்கு புத்தகம்
உன் கண்கள் அல்லவா!
உன் இமைத்துடிப்புகள் அல்லவா!
காதல் பட்டம் விடும்
சீஸன் ஆரம்பித்து விட்டது!
"காதலர் தினம்"
உன்னை நோக்கிப்பாயும்
அந்தப் பட்டங்களுக்கு
ஜிகினாக்கள் எதற்கு ?
என் இதயம் கூழாக்கிய
மாஞ்சாவில்
என் நாளங்க்களே கயிறுகள்.
நீல வானமும் இனி
சிவப்பு மயமே
உன் மௌன உரசல் "டீல்"களால்.!
================================================