அவளே
பகலை வெறுத்து அவள் ஒதுக்க
பகலை மறைத்து இரவைத் திறக்க
பால்வழி கடந்து நடந்தே போனேன்
கடவுள் தேடி கருணை வேண்டி
காற்றில்லை இருந்தும் அவளால் போனேன்.
புல்லில் பூத்த பனியும் உந்தன்
விரலைத் தொடவே விரும்புவ தென்ன
புவியில் பூத்த கனியே நீயும்
என்னைப் பார்த்தே கனிவ தென்ன
கல்லில் பூத்த படமாய் உன்னை
உதிரம் கொண்டே உயிர்த்தவன் யானே
இரவின் உயிரை பறித்த நிலா
உயிரைப் பறித்து நீயும் உலா
வர ஊரெங்கும் உன்னாலே விழா
உன் பேச்சு என்றும் முக்கனியில்
நாவிழுக்கும் சுவை மிகு பலா