முல்லைப் பூ
கனவுக் காட்டில் அவளும் வந்து
கண்ணால் காட்டி காதல் சொன்னாள்
நாணம் பொறுத்து நானும் வந்து
நாவால் நவிழ்ந்து நன்மொழி சொன்னேன்
விண் கடந்து விடியல் பார்த்தேன்
பொன் மின்னும் பொழுதைப் பார்த்தேன்
பகலில் பாய்ந்த வால்மீன் பார்த்தேன்
பாலை நிலத்தில் பசுமை ஆட
பாதை முழுதும் பாதம் பார்த்தேன்.
முல்லை மலரின் தேனாய் வந்து
மூன்று கோடி முத்தந் தந்தாள்
உள்ள முகட்டில் உயரம் நின்று
முள்ளால் கீறி முழுமை தந்தாள்
கள்ள உலகில் காற்றாய் வந்து
உயிரின் நினைவைத் திருடிச் சென்றாள்.