கோபம் கொள்
அன்னை தெரசாவின்
கோபம் கருணையில்
இருக்கிறது.!
அப்துல் கலாமின்
கோபம் அக்கினிச் சிறகுகளில்
இருக்கிறது.!
பாரதியின்
கோபம் கவியில்
இருக்கிறது.!
பாமரனின்
கோபம் வாக்குச் சீட்டினில்
இருக்கிறது.!
கோபம் கொள்ளாத
மனிதனும் - இம்
மண்ணில் உண்டோ.?
பிறர் மகிழ்ச்சியை
கொல்லாத போது
கோபம் கூட
நல்லது தானே.!?