கடித்துப் புசிப்பாய்க் கனி

காய்ச்சிய வெண்ணெய் கமகமக்கும் நெய்யாகும்
காய்ந்தமீன் நாறும் கருவாடாம் - காய்ச்சல்
அடித்திட வாசமு மாகா தெனவே
கடித்துப் புசிப்பாய்க் கனி.

( காய் - என்று தொடங்கி கனி - என்று
முடியும் வெண்பா )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (3-Feb-16, 11:12 am)
பார்வை : 69

மேலே