முத்தேசம்

நல்லெழில் ததும்பி வழிவது
எத்தேசம்
எல்லொளி குவிந்து விழுவது
இத்தேசம்
நல்லொளி கவிந்து பரவட்டும்
முத்தேசம்
நல்வழி இனிப்பிறக்கும் இதென்
உத்தேசம்
அல்வழி இல்லாதொழிந்தால்
நற்றேசம்
அல்வழியே நல்வழியென்றால்
முட்டேசம்
கல்லுளியும் வில்லுளியுமானால்
கைசேதம்
அல்-தீய
எல்-பகலவன்