என் செல்ல சாய் தேவாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

எல்லாம் வல்ல இறையருளோடு ...... நாளை
மூன்றாம் அகவையில் அடியெடுத்து வைக்கும் ....
எங்கள் அன்பு வனத்தின் பிறை நிலவே ...
எங்களின் இளைய தளபதியே ....
பூ மகனே ... பொன் மகனே ......
சிங்காரத் தமிழ் மகனே ....
என் இனிய சாய் தேவா ......
அந்த எல்லாம் வல்ல இறையருளால் ...
நலமோடு வளமும் பெற்று ....
வாழிய நீ பல்லாண்டு ....
பல்லாண்டு .... பல்லாண்டு ...
பல கோடி நூற்றாண்டு ....
என உளமார வாழ்த்துகின்றேன் ....
எந்தன் புன்னகை புது நிலவே ...
உன் புன்னகையில் பூத்ததடா புது வானம் ...
ஆம் பாசத்தின் மறு உருவாய்
பார்க்கின்றேன் உனை நானும் .... .
உனக்கென எது ஒன்றும் வாங்கும் போதெல்லாம்
"அண்ணாவுக்கு"
என நீ கேட்கும் உன் ஒற்றை
சொல்லில் அறிந்தேனடா ...
நீ பாசத்தின் சிகரம் என்று ... ..
என் கவிதையின் நாயகனே .....
நீ பேசும் வார்த்தை எல்லாம் கவிதை என ஆகுமடா ... ஆம்
உன் தமிழுக்கு முன்னாலே ...
கவியரசும், வைரமுத்தும் ...
தந்த கவிதைகளும் தோற்குமடா. ..
நீ சிரிக்கும் சிரிப்பொலியே ...
எனக்கு சிம்பொனியாய் ஆகுமடா ...
அந்த இசைஞானி இசைத்ததுவும் ....
உன் சிரிப்பொலியில் தோற்குமடா ..... .
எவரெஸ்ட் சிகரம் கூட ஈடில்லை உன் முன்னே ....
என் உயிரான பொன் மகனே ....
நீ எந்தன் உயிராவாய் ....
வாழ்வில் வருகின்ற துயர் யாவும்
நீ எதிர் வந்தால் பயந்தோடும் ....
என் வீர திருமகனே ....
நாளை அகிலம் உன் புகழ் பாடும் ...
எத்திக்கும் நீக்கமற இருக்கின்ற இறையருளோ
உனக்கு என்றென்றும் துணை யாகும் ....
நீ பிறந்த இந்நாளில் உனைக் காண
எத்தனையோ முயன்ற போதும் ...
முடியாமல் போனதடா ... கடல் கடந்து வந்தனால்
என்னால் முடியாமல் போனதடா ....
என்ற போதும் ...
உயிராய், உணர்வாய் ... என்னுள்ளே வாழ்பவனே ...
கண் மூடி உனைக்கண்டு ....
கனவினிலே உனை தூக்கி
கொஞ்சி விளையாடுகின்றேன் ..... ஆம்
உனை தூக்கி கொஞ்சி விளையாடுகின்றேன்
அன்றாடம் .... நான் இங்கு ...
என் முத்தான மழைத்துளியே....
உன்னை மொத்தமாய் கட்டி அணைத்து
முத்தமெனும் மாலை சூட்ட
உனை காணும் நாட்களுக்காய்
வழி மீது விழி வைத்து காத்திருக்கின்றேன் ...
என்றென்றும் அன்பு வழி மாறாது அறவழியில் நீ சென்று
வாழ்வாங்கு வாழடா ... என் இனிய திருமகனே ....
என நானும் வாழ்த்துகின்றேன் நீ பிறந்த இந்நாளில் ...
இங்ஙனம் உன் அன்பு அப்பா ... .