வானப் பெண்ணின்

வானத்தின் வதனத்தில்
வந்து நிறைக்கும்
நட்சத்திரப் பருக்கள்

மோனத்தில் ஆழ்ந்திருந்தும்
முகிழ்த்திடுதோ காதல் ...
முகமெங்கும் செம்மை ....

முழுமதிஎன்னும் முத்தான
மூக்குத்தியணிய முடிந்திருந்தும்
வளர் - தேய் பிறைஎன்றே

வகைவகையாய் மாட்டிப்பார்த்தும்
வடிவாக இல்லையே என்று
வருத்தப்பட்டு நீக்கும் அழகு வானே

அணியற்ற உன்முகமோ
அமாவாசை என்றாக
அலுப்புற்று நீ நிற்பாய்.

உன் விரதம்
ஓரிரவே தாங்கும்
அடுத்த நாள் முதலே

வளர் பிறைகளென்ற
வகையான அணிகளைத்தான்
வாகாக அணிந்திடுவாய் .

எழுதியவர் : (3-Feb-16, 2:10 pm)
Tanglish : vaanap pennin
பார்வை : 80

மேலே