தமிழ்மொழியைப் பழகிடு ---- வஞ்சித் தாழிசை
இதந்தரும் தமிழினைப்
பதமுடை அழகினில்
விதந்தரும் நடையினில்
பதந்தனைப் பழகிடு .
இனிமையில் உயர்ந்திடும்
கனிநிகர் சுவைதரும்
தனிவளர் மொழியினைப்
பனியெனப் பழகிடு .
அழகிய மரபினை
வழங்கிடும் தமிழினைக்
கழலென நினைத்திடு .
பழந்தமிழ் பழகிடு .