காதலும் கடந்து போகும்

உன் மீது காதல் இல்லை.
இருந்தும் நான் நடிக்கிறேன்.
என் தேடல் நீயும் இல்லை.
இருந்தும் உன் பின்னால் அலைகிறேன்.
விழி உன்னை தேடும்போதும்.
மனம் பின்னால் ஓடும் போதும்.
ஒரு பொய் சொல்லிப் பார்ப்பேன் அன்பே.
நீ எனக்கு வேண்டாம் என்று!

மனம் ஏனோ ஏற்க்க மறுக்கும்
உன் பின்னால் கால்கள் நடக்கும்.
என் இதயம் துடிக்க மறுக்கும்.
சிறு சண்டை எனக்கும் எனக்கும்.
அதில் வெல்வது மட்டும் நீயே ஏனோ
காரணம் உன்மேல் காதல் தானோ!

ஒரு போர்க்கலம் இல்லாமல்
சிறு சத்தம் இல்லாமல்
ஒரு யுத்தம் அரங்கேறும்
என் உலகம் உனதாகும்
துளி ரத்தம் இல்லாமல்
சில காயங்கள் எனதாகும்
அடி கொஞ்சம் சிறி பெண்ணே
உன் புன்னகை மருந்தாகும்

ஒரு காரணம் இல்லாமல்
உன் நினைவுகள் எனை அடிக்கும்
அவள் வருகையை உணர்த்திடவே
பூங்காற்றும் மணமணக்கும்
எனை கடக்கும் நேரங்களில்
ஒரு பார்வை வீசிடுவாள்
என் மூச்சி தினறல்களில்
அவள் காதல் சிதறிடுவாள்
நான் கொஞ்சம் விழுந்தாலே
தன் நெஞ்சம் பதறிடுவாள்
என்ன காரணம் என்றாலே
ஒரு மௌனம் சிரித்திடுவாள்

போதுமடி பொன் மணியே
பொறுமை இங்கே மிச்சமில்ல.
காதல் சொல்லு கண்மணியே
வாழ்க்கை மீது அச்சமில்ல.
கண்ண மட்டும் பேச விட்ட
காதில் ஒன்னும் கேக்கலையே
வருஷம் 12 முடிஞ்ச பின்னும்
குறிஞ்சி பூ பூக்களையே.
உன் முடிவு எதுவாயினும்
என் காதல் நீதானே.
நீ என்னைச் சேர்வாய் என்றால்
கடவுள் பெயரும் மறந்தே இருக்கும்
நீ என்னை நீங்கிச் சென்றால்
கடவுச் சொல்லாய் உன் பெயர் நிலைக்கும்!

எழுதியவர் : (3-Feb-16, 11:59 pm)
சேர்த்தது : Nelson Vasudevan
பார்வை : 544

மேலே