உன் செவ்விதழ் காணாத நொடிவரை - கற்குவேல் பா
நயாகரா
நீர் வீழ்ச்சியில் - குளித்த
அனுபவமில்லை ;
உன் கூந்தல் உதறல்களில்
உடல் சிலிர்த்ததுண்டு !
பாரிஸ்
நகர வீதிகளில் - நடந்த
அனுபவமில்லை ;
நீ குடியிருக்கும் வீதியின் ,
நீள அகலம் ,
அறியாமலும் இல்லை !
வெனிஸ்
நகர வாய்க்கால்களில் ,
படகு சவாரி செய்ததாக
நினைவினிலில்லை - நீ
பயணம் செய்த
பேருந்துகளில் - பலமுறை
கவிதை பயின்றதுண்டு !
ப்ளோரன்ஸ்
நகர அரண்மனைகளில் ,
தங்கிய அனுபவமில்லை ;
உன் கல்லூரி நிறுத்தத்தில் ,
ஓராயிரம்முறை - காத்திருந்த
அனுபவமுண்டு !
டாஸ்மன்
கடற்கரை ஓரங்களில் ,
ஒருமுறைகூட ,
கால் பாதித்ததில்லை ;
மெரினா கடற்கரையில் ,
நீ விட்டுச் சென்ற
பாதச் சுவடுகளில் - தலை
சாய்த்து உறங்கியதுண்டு ,
ஒருநூறு முறை !
இசர்
நதிக்கரையில் - சத்தியமாக
இளைப்பாறியதில்லை ;
உன்
தொங்கட்டான் அசைவுகளில்
என்னையே இழந்ததுண்டு !
பிரமிடுகளின்
மர்மம் உடைக்கும்
எண்ணம் ,
சிறிதும் இல்லை - உன்
கூந்தலுக்கு
வாசமுண்டென்பதை ,
உலகிற்கே சொல்ல வேண்டிய
கட்டாயமுண்டு !
வியன்னா
நகரில் - குடியேறும்
ஆசையிருந்ததில்லை ;
உன் முத்தங்களுக்கு ,
இறையாகிட
விரும்பியதுண்டு !
கசல்
கவிதைகளை ,
ரசித்ததுண்டு - உன்
செவ்விதழ் காணாத
நொடிவரை !
~ பா . கற்குவேல்
#சில_நொடிக்_காதல்