ஆயிரம் அர்ச்சுனர்கள்

காந்திஜி எங்கிருந்தாலும் கடிதம் எழுதும் பழக்கத்தை விடவே மாட்டார்.

தினசரி சபர்மதி ஆசிரமத்துக்கு வரும் கடிதங்கள் அனைத்தையும் படித்துவிட்டு, பதில் தரவேண்டிய கடிதங்களுக்கு உடனுக்குடன் பதில் கடிதம் எழுதி அனுப்பிவிடுவார்.

ஒருசமயம் காந்திஜி சிறையில் இருக்கும் போதும் சபர்மதி ஆசிரமத்திலிருந்த சிறுவர் சிறுமியர்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை கடிதம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஆசிரம சிறுவர்கள் எழுதி அனுப்பும் கடிதங்களுக்கு காந்திஜியும் நகைச்சுவையோடு சுருக்கமாக பதில்களை எழுதி அனுப்பி வைப்பார்.

அவருடைய சுருக்கமான பதில்கள் சிறுவர், சிறுமியர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை.

அவர்கள் காந்திஜிக்கு, “காந்திஜி அவர்களே, பகவான் கிருஷ்ணன், அர்ச்சுனன் கேட்ட சிறு சிறு கேள்விகளுக்குக் கூட அத்தியாயம் அத்தியாயமாய் பதில் அளித்தார்.

ஆனால் உங்கள் பதில்கள் ஓரிரு வார்த்தைகளாகவே இருக்கிறதே! ஏன் அப்படி?” என்று கேட்டு கடிதம் அனுப்பினார்கள்.

அதற்கு காந்திஜியும் பதில் அனுப்பினார்.

“குழந்தைகளே, பகவான் கிருஷ்ணருக்கு ஒரு அர்ச்சுனர் மட்டும்தான் கேள்வி கேட்பவராக இருந்தார். ஆனால், எனக்கு உங்களைப் போல் பல ஆயிரம் பேர் கடிதம் எழுதுகிறார்கள், கேள்வி கேட்கிறார்கள். எல்லாருக்கும் பதில் எழுத வேண்டியதிருக்கிறதே...” என்று நகைச்சுவையாகப் பதில் எழுதி அனுப்பினார்.

சிறுவர், சிறுமியர்கள் காந்திஜியின் விளக்கம் படித்து, அவரின் சுருக்கமான பதிலைப் படித்து மகிழ்ந்து போனார்கள்.



*தாத்தா- பேரன்



இருவர் ஒரு ஓட்டலுக்கு சாப்பிட போனார்கள். அங்கே ஒரு பலகையில்

‘இங்கே நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். பணத்தை உங்கள் பேரப்பிள்ளைகள் செலுத்தினால் போதும்’ என்று அறிவிக்கப் பட்டிருந்தது.

சாப்பிட போன அந்த இருவரும் அந்த அறிவிப்பை படித்து மகிழ்ந்தார்கள். நாம சாப்பிடறதுக்கு நம்ம பேரன்கள் அல்லவா காசு கொடுக்கப் போகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு அந்த ஓட்டலில் சாப்பாட்டை வெளுத்து கட்டினார்கள்.

பெரிய ஏப்பத்துடன் கையை கழுவி விட்டு வந்தவுடன், சர்வர் ஒரு பெரிய தொகையை பில்லாக கொடுத்தார்.

சாப்பிட்ட இருவருக்கும் கோபம்னா அப்படி ஒரு கோபம்,

“என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க? என்ன எழுதி போட்டு இருக்கு? என்ன இது பில்லு?” என்று கத்தினார்கள்.

சர்வர் அமைதியாக சொன்னார்

“எல்லாம் சரிதான். ஆனா, இது உங்க தாத்தா சாப்பிட்ட பில்லாச்சே....” என்றார்.

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (5-Feb-16, 10:31 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 77

சிறந்த நகைச்சுவைகள்

மேலே