அவ்வை ஏழைகளின் சொத்து

சோழ வள நாட்டிற்குள் அவ்வை வருகின்றார். வனப்பகுதியில் வருகின்ற போது ஒரு குறப்பெண் அழுது கொண்டிருப்பதனைப்

பார்த்து இன்னொரு குறப் பெண் சிரித்துக் கொண்டிருக்கின்றாள்.

அவ்வை அருகில் வந்தவுடன் கேட்கின்றார். அந்த வயதில் பெரியவளான குறப்பெண் இவள் எனது கணவனின் இரண்டாவது மனைவி. என் கணவன் வெளியூர் போகும் போது அவன் ஆசை ஆசையாக வளர்க்கும் இந்தப் பலா மரத்தை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டுப் போனான். எனது சக்களத்தி இந்த மரத்தை வெட்டி விட்டு இந்தப் பழியை என் மீதுப் போடப் பார்க்கிறாள் என்று அழுவதைப் பார்த்து அந்தப் பலா மரம் தழைப்பதற்குப்

பாடுகின்றார் அவ்வை. பலாமரம் தழைக்கின்றது.



அந்த பெரிய குறத்தி மனம் மகிழ்ந்து அவ்வைப் பெருமாட்டிக்கு நாலு உழக்குத் தினையைத் தருகின்றார். அக்காலத்தில் வழிப்

பயணத்தில் பொருட்களை சீலையில் முடிச்சு முடிச்சாகக் கட்டிக்

கொண்டுதான் வழி நடப்பார்கள். பெருமாட்டியும் சோழனைப்

பார்க்க அரண்மனைக்குப் போகின்றாள். அந்தக் காலத்திலெல்லாம்

ஆட்சியாளர்கள் தமிழ்புலவரகளை தங்களை எந்த நேரத்தும் சந்திக்க அனுமதி அளித்திருந்தனர். கேட்காமலே அறிஞர்கள் மட்டும் எப்போதும் ஆட்சியாளனைச் சந்திக்கலாம்.

அவ்வையை வரவேற்ற சோழனோடு கம்பரும் இருந்தார்.

சோழன் அவ்வையின் தோளில் தொங்கிய துணி மூட்டையைப்

பார்த்து அது என்ன என்று கேட்டான். பொன்னுக்குப் பாடும்

கம்பரைப் பார்த்தவுடன் அவ்வைப் பெருமாட்டி சோழனுக்குச்

சொல்லும் போதே கம்பனுக்குப் படுகின்றாற் போலச் சொல்லுகின்றார்.

சோழ மன்னா உன்னைப் பாடிப் பரிசில் பெற்று வாழப் பல புலவர்கள் உள்ளனர். ஏழைகளைப் பாடுவதில் எனக்கு ஒரு பெரும் இன்பம் உண்டு.

நான் வருகின்ற வழியில் இரண்டு குறப் பெண்களுக்கிடையில்

சக்களத்திச் சண்டையில் இளையவள் அவள் கணவன் ஆசை ஆசையாக வளர்த்த பலா மரத்தை வெட்டி பழியை

மூத்தாள் மேல் போட நினைத்தாள். அந்தப் பெண்ணைக் காப்பதற்

காக அந்தப் பலா மரம் தழைக்கப் பாடினேன். அவளுக்கு எனக்கு

ஏதாவது தர வேண்டுமே என்று விருப்பம். அவளால் பொன்னா கொடுக்க முடியும் . அவளிடமிருந்த தினையை நான்கு உழக்கு

கள் தந்தால். அதைத்தான் முடிந்து வைத்திருக்கின்றேன்.

தினைக்கு மட்டுமல்ல சில ஏழைகள் என் பாட்டிற்கு உப்பு தந்திருக்கின்றார்கள். சிலர் புளி தந்திருக்கின்றார்கள். மாளாத தூய

அன்பினால் அவர்கள் தருகின்ற பரிசுப் பொருட்கள் அல்லவா அவை. பொன்னை விடப் பெரியது என்கின்றார் பெருமாட்டி.


செய்யுள்

கூழைப் பலாத் தழைக்கப் பாடக் குறமகளும்

மூழாக்குழக்குத் தினை தந்தாள் - சோழாகேள்

உப்புக்கும் பாடி புளிக்கும் ஒரு கவிதை

ஒப்பிக்கும் எந்தன் உளம்.

இறுதி அடியில் ஒரு அடி வைக்கின்றாள் அவ்வை. அவள் கவிதை

கள் உள்ளத்தில் இருந்து வருபவை என்று.


*********************************

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (6-Feb-16, 12:39 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 112

சிறந்த நகைச்சுவைகள்

மேலே