திசைமாறிக் கிடப்பதுவா மனிதாபிமானம்

வயிரெலாம் காய்ந்திருக்க இன்றும்
சாலையோரம் சிலர் சாய்ந்திருக்க
பெய்த மழையில் மட்டும்
எப்படித்தான் முளைத்ததோ மனிதாபிமானம்

ஆடி யென்றால் மட்டுமே
முறைவைத்து வந்து செல்ல
மனையாளின் சீதனமோ மனிதாபிமானம்

உன்னோடு பிறந்த உன்இதயம்
உனக்காக துடித்திருக்க -நீ
உறவாடப் பிறந்த மறுஇதயம்
உணவின்றி தவித்திருக்க -கண்டுங்காணமல்
திசைமாறிக் கிடப்பதுவா மனிதாபிமானம்
-மூர்த்தி

எழுதியவர் : மூர்த்தி (7-Feb-16, 11:23 am)
பார்வை : 89

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே