கல்யாணம்

பஜ்ஜிகளையும், பலகாரங்களையும்,
மூக்குமுட்ட
சாப்பிட்டு பதிலை
சொல்லி அனுப்புகிறோம்
என்று நடையைகட்டும்
சாதார உண்மை பொய்களுக்கு!
போலியாக தலையாட்டி"""

காத்திருப்புக்களை அந்தரத்தில்
காயப்போட்டு,
கனவுகளில்
பட்டாம்பூச்சிகளை கஸ்டப்பட்டு
பறக்கவிடுவதும்,

முகப்பூச்சுக்களில்
முகத்தை தவிர்த்து ,புருவங்களை
வழித்து கற்பனைமையில்
கறுப்புக்கோடு கீறுவதும்,

சிரிப்பின் செந்தளிப்பில்
விழுந்த கன்னக்குழிகளில்
தேங்கி நிற்கும் வசிகரங்ளை
பார்த்து
நிலைக்கண்ணாடியுடன்
வெட்கப்படுவதும்.

நெற்றிமுகட்டில் விழுந்தெழும்
கூந்தலை நிமிடம் தவறாமல்
நீவி விட்டு கல்யாண கனவை
பகலில் காண்பதும்,
காலம் கனியவேண்டும் என்ற
பிரார்த்தனையில்!

தபால்காரன் வருகையை
எதிர்பார்பில் ஈரமாக்கி!
தொடர்ச்சியான பயணமொன்றின்.
பொழுதுகளை
காலம் பசிக்கு உணவாக்குகிறது!!!

எழுதியவர் : லவன் (7-Feb-16, 2:31 pm)
பார்வை : 286

மேலே