அன்னையின் அறிவு
ஒரு வாய் சோறு
உட்கொள்ள நிலவுக்குள்
உலகத்தையே படைத்து
அதில் ஆயாவை வடை சுட
வைக்கும் அதீத பொய்களை
நம்ப வைக்க
தாயால் மட்டுமே முடியும்
குழந்தையின் மகிழ்ச்சிக்காக
குழந்தையின் நன்மைக்காக
எதையும் நம்பும்படி சொல்ல
அன்னையால் மட்டுமே முடியும்
இன்றும் நிலவைப் பார்த்து
ஆயாவையும்,வடை சட்டியையும்
தேடவைத்த அன்னையின்
அறிவுக்குமுன் தோற்றுத்தான் போகிறேன்!

