அன்பு மகள்

சுருக்குன்னு கோபம் வருது
நறுக்குன்னு நாக்கைக் கடிக்குது
செல்ல சேஷ்டைகள் கண்டு

வெட்டென கோபம் மறையுது
சட்டென மனசு குளிருது
சின்ன புன்னகையைக் கண்டு

மெல்லதான் வந்து நிக்குது
சொல்ல முடியாம தவிக்குது
என்திடீர் கோபத்தைக் கண்டு

வந்துதான் என்னை அணைக்குது
ஆசைவார்த்தைகள் எல்லாம் பேசுது
தன்னைப்பார்த்து சிரித்ததைக் கண்டு

- செல்வா

எழுதியவர் : செல்வா (6-Feb-16, 10:22 am)
சேர்த்தது : செல்வா
Tanglish : anbu magal
பார்வை : 3385

மேலே