ஷெல்லி மேல் ஆணை
தாவிப் பாய்வதெல்லாம் காவிரி அல்ல
துள்ளி ஓடுவதெல்லாம் மான் அல்ல
நீந்துவதெல்லாம் மீன் அல்ல
எழுதுவதெல்லாம் கவிதை அல்ல
நான் சொல்லுவதெல்லாம் முற்றிலும் பொய்யும் இல்லை !
நீ நெஞ்சில் பாய்ந்து வரும் காதல் காவிரி
நீ துள்ளி ஓடுவதில் மான் என்றால்
உன் விழிகளில் துள்ளுவது கயல் மீன்
இவைகளை எல்லாம் நீ ஏற்றால்
நான் எழுதுவதும் கவிதைதான்
நான் சொல்லுவதெல்லாம் முற்றிலும் பொய் இல்லைதான்
ஷெல்லியின் கவிதை மேல் ஆணையிட்டுச் சொல்வேன் !
~~~கல்பனா பாரதி~~~