என்றேனும் கடந்திடுவேனா

இறந்து விட்ட நொடிகளிலே
உழன்று திரியும் மனம்தனை
பிடரிப் பற்றி இழுத்துவந்து
நிகழ்காலம் எடுத்துரைக்க
முயன்று தவிக்கும் - அறிவதனின்
முடிவிலா முயற்சி எல்லாம்
அரவமின்றி மடிகிறது -
மரணித்துவிட்ட நொடிகளிலே...

இறந்துபோன மரண ஓலம்
செவி பறையை கிழித்தெறிய
உயிர் பெற்ற அச்சத்திலே
மறுமுறை நரகவேதனையா?
நரம்புகளெல்லாம் கதறுகிறது...
புதைத்திட்ட பிரேதத்தை
மறுசோதனை செய்யாமல்
என்றேனும் கடந்திடுவேனா
என் இறந்த காலத்தை...
~கிருஷ்ணநந்தினி.

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (9-Feb-16, 9:08 pm)
சேர்த்தது : கிருஷ்ணநந்தினி
பார்வை : 103

மேலே