மௌனக்காதல்---ப்ரியா
நீ பார்க்கும் போதெல்லாம்
பார்க்காதது போல் செல்வது
உன்னை பிடிக்காததால் அல்ல
உன் கண்களில் மயங்குவதால்
அதில் அவ்வளவு போதை.......
உன் பலமான பார்வையை
தினம்தினம் வீசி செல்கிறாய்
அதில் நான் பலவீனமாகிவிடுகிறேனடா.....!
நீ புன்னகைக்கும் போதெல்லாம்
மௌனமாய் கடந்து செல்வது
உன்னை பிடிக்காததால் அல்ல
உன் புன்னகையில் வீழ்வதால்
அதற்கு அவ்வளவு ஈர்ப்பு.....
ஆழமான புன்னகையை
இதழ்களால் உதிர்த்து செல்கிறாய்
அதில் நான் தொலைந்து போய்விடுகிறேனடா.....!
நீ என்னை பாராது
மௌனமாய் கடந்து செல்லும்போது
இதயமே ஒரு நிமிடம் நின்றுவிடுகிறது......!
ஒவ்வொரு காதலர் தினத்துக்கும்
காதலை சொல்லாமல்
தோற்றுப்போகிறோம்......
இந்த காதலர் தினத்துக்கும்
காதலை சொல்லிவிடாதே
உன் கரம்பிடிக்கும் வேளைவரை
இந்த மௌனக்காதலே எனக்கு அழகு.....!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
