என்னவன்---ப்ரியா

மனம் முழுவதும் காதலோடு
காதலர் தினத்தில்
கரம் பிடித்தவன்.....

மார்கழி மாதத்து
பனித்துளியாய்
என் வாழ்வில்
குளிர்ச்சியூட்டியவன்....

மல்லிகை மலராய்
என் வாழ்வில்
வாசம் வீசியவன்......

வாழ்வின்
இன்பத்தையும் துன்பத்தையும்
பிரித்து காட்டியவன்.......

மழைத்துளியாய்
என் வாழ்வில்
அன்பை பொழிந்தவன்......

நட்சத்திரங்களை போல்
என் வாழ்வில்
ஒளி வீசியவன்.......

சூரியனையும் சந்திரனையும் போல்
என் வாழ்வில்
அன்பையும் கோவத்தையும்
புரிய வைத்தவன்......

தீராத அன்பும்
மாறாத நம்பிக்கையும்
என்மீது கொண்டவன்.......

உணர்வுகள் புரிந்து
நடந்து கொள்பவன்
அவனே என்னவன்
என் காதலன்......
ஆயுள் முழுவதும்
உன் இதயத்தில்
என்னை சிறை வைத்துகொள் காதல் கைதியாய்.......!!

எழுதியவர் : ப்ரியா (12-Feb-16, 1:18 pm)
பார்வை : 536

மேலே