காதலை தேடி

கன்னி பருவமதில்
காதல் பெருக்கெடுக்க
கல்வி தனைமறந்து
கனவை பறிகொடுத்து
காதலனும் கைவிரிக்க
காதலதை தொலைத்துவிட்டு
காணும் இடமெலாம் " தேடினேன் காதலை "

பரிமாற பலரிருந்தும்
பாட்டிக்காக காத்திருக்கும் தாத்தாவின் உணவுதட்டில் !!
அப்பாவின் வருகைக்காக
சமையலிலொன்றும் வாசற்கதவினில் ஒன்றுமாய் பதிந்திருக்கும் அம்மாவின் கண்களில் !!
அமெரிக்க காதலியுடன்
அரட்டையடிக்க இரவெலாம் விழித்திருக்கும் அண்ணனின் கணினியில் !!
செல்லநாய்க்குட்டி குடிக்காத பாலுக்காக
தானும் பட்டினிகிடக்கும் தங்கையின் அடம்பிடிப்பில் !!
" கண்டுகொண்டேன் காதலை " !!!

எழுதியவர் : பிரியா (12-Feb-16, 1:44 pm)
சேர்த்தது : PRIYA0702
பார்வை : 259

மேலே