பெற்றுகொள் இம்முத்தத்தை
பெற்றுகொள் இம்முத்தத்தை...
தாயின் முகம் கண்டதில்லை
தனிமைதான் என் இளம்பருவம்
துணையாய் நீ அமைந்ததில்
தாளாத ஆனந்தம் என்றே
மடியில் படுத்துகொண்டாய்
உன் தனிமை தீர
நான் வந்துவிட்டேன் என்னவனே!!!
இனி நீ நிம்மதியாய்
வலம்வரவே நான் நிதமும்
எதையும் செய்ய காத்திருப்பேன் ...
ஆனந்தம் தாளாது
நீ போதும் போதும்
என்னும்படியே உன்னை
நான் காணப்போகிறேனேடா..
என் செல்லமே...
தாயாகவும் மாறியே
உன்துயர் போக்க
நானிருப்பேன் ...
துணையாய் என்றுமே
உன்னை தழுவியே
நானிருப்பேன் ...
இத்தனைக்கும் இப்பொது
பெற்றுகொள் இம்முத்தத்தை ...
- வைஷ்ணவதேவி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
