தென்றலோடு கலந்திருக்கும் என் சுவாசம் 555
உயிரே...
உன்னை தினம் தினம்
தொடரும் என்னை கண்டால்...
உனக்கு வெறுப்பாகத்தான்
பலநேரம் இருக்கும்...
உன்னோடு சேர்ந்து கைகோர்த்து
நடைபோட வேண்டும்...
உன்னுடன் காதலனாக அல்ல
காதல் கணவனாக...
உன்மேனி தொட்டு நடைபோடும்
உன் நிழல்கூட...
நிழலில் உன்னால்
காணமுடியாது...
என்னை நீ காணமுடியாத
நேரங்களில்கூட...
உன்னால் உணரமுடியும்
என் சுவாசத்தை...
நீ வாழ்வதற்காக நான்
தென்றலோடு கலந்திருப்பேன்...
உன் சுவாசகாற்றாக...
நீ சுவாசிக்கும்
ஒவ்வொரு முறையும்.....