அவள் ஒரு அதிசயம்

என்ன தவம் செய்தேனோ...?
என்னவளின் முகத்தைக் காண....!

கண்ணிருந்தும் குருடனானேன்
அவளைக் காதலித்தபோது....!!

பரந்த மனம் கொண்டவள் என்னவள்....!
பாரி வள்ளல் பரம்பரையாம்.....
வாரி வாரி வழங்குகிறாள்
தன் உண்ணதக் காதலை....

ஊரிலுள்ள ஆண்களுக்கெல்லாம்
உயர்வு தாழ்வு பாராது....!!

என்னவளின் இதயத்தில் ஒரு சிறு விறிசலாம்...
கடமை தவறாக் காவலர்களோ....
என்னை சந்தேகத்தின் பெயரில்
கைது செய்துள்ளனர்......!
ஒருவேளை.............

நான் அவளை ஆழமாக காதலித்திருக்கலாமென்று.....!!

-சதீஷ் ராம்கி.

எழுதியவர் : சதீஷ் ராம்கி (14-Feb-16, 9:41 am)
சேர்த்தது : சதீஷ் ராம்கி
Tanglish : aval oru athisayam
பார்வை : 444

மேலே