அரை நொடி தான் நம் காதல்

அரை நொடி தான் உன் விழியின்
நெடியைக் கண்டேன்
குண்டூர் மிளகாயும் தோற்றுவிடும்
உந்தன் காரமான பார்வையினால்

அரை நொடி தான் உன் இதழின்
சுவையை சுவைத்தேன்
மலைநாட்டுத் தேனும் தோற்றுவிடும்
உந்தன் இனிமையான முத்தத்தால்

அரை நொடி தான் உன் குரலின்
ஓசையை கேட்டேன்
கண்ணனின் பூங்குழலும் தோற்றுவிடும்
உந்தன் இனிய பேச்சால்

அரை நொடி தான் உன் கூந்தலின்
மணம் நுகர்ந்தேன்
மதுரை மல்லியும் தோற்றுவிடும்
உன் கூந்தல் வீசிச்செல்லும் நறுமணத்தால்

அரை நொடி தான் உன் கன்னக்குழியின்
ஆழம் கண்டேன்
பெருங்கடல் யாவும் தோற்றுவிடும்
உன் கன்னக்குழியின் ஆழத்தினால்

அரை நொடி தான் உன் காதலின்
உண்மையை உணர்ந்தேன்
நமைக் காக்கும் இயற்கையும் தோற்றுவிடும்
உன் அளவற்ற அன்பினால்.!!!!

எழுதியவர் : சதீஷ்குமார் (13-Feb-16, 10:59 pm)
சேர்த்தது : சதீசுகுமரன்
பார்வை : 101

சிறந்த கவிதைகள்

மேலே